தம்பியாக நடத்தினார் அஜீத் : பாலா

No comments
அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் உட்பட சில படங்களில் நடித்த பாலா, வீரம் படத்தில் அஜீத் தம்பியாக நடித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வீரம் படத்தின் இயக்குனர் சிவா, என் அண்ணன். படத்தில் அஜீத்தின் தம்பியாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

 ஷூட்டிங்கில் நிஜ தம்பியாகவே அஜீத் என்னை நடத்தினார். நடிக்கும்போது நிறைய டிப்ஸ் கொடுப்பார். ஒரு நடிகன் எப்படி இருந்தால் மக்கள் ரசிப்பார்கள் என்பதற்கு அஜீத் நல்ல உதாரணம். தமிழில் சில படங்களில் நடித்தும், ஹீரோவாக எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

 மலையாளத்தில் தொடர்ந்து என் படங்கள் ஹிட்டானதால், அங்கு தொடர்ந்து நடித்து வருகிறேன். அடுத்து சிவா என்னை ஹீரோவாக இயக்குகிறாரா என்று கேட்கிறார்கள். இதை அவர்தான் சொல்ல வேண்டும். 

வீரம் பார்த்த பிறகு பல இயக்குனர்கள் என்னிடம் பேசுகிறார்கள். வித்தியாசமான கதை கொண்ட படங்களில் ஹீரோவாக நடிக்கத் தயாராக இருக்கிறேன். கதைக்கு திருப்புமுனை கேரக்டர் என்றால், வில்லனாகவும் நடிப்பேன்.

No comments :

Post a Comment