ஜீன்ஸ் 2: பிரசாந்த் அப்பாவுக்கு எச்சரிக்கை
ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யாராய் நடித்த படம் ஜீன்ஸ். கடந்த 1998ம் ஆண்டு திரைக்கு வந்தது. படம் வெளியான 12 ஆண்டுக்கு பிறகு இப்படத்தின் 2ம் பாகத்தை நடிகர் தியாகராஜன் தயாரிக்க திட்டமிட்டார். அதில் பிரசாந்த் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதுபற்றி ஜீன்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அசோக் அமிர்த்ராஜ் கூறியதாவது: ஜீன்ஸ் 2ம் பாகம் தயாரிப்பதில் நான் ஈடுபாடுகாட்டவில்லை. 2ம் பாகம் எடுக்க முடியுமா என்பது சந்தேகம்தான். அதற்கான உரிமை யாருக்கும் இல்லை.
அதனால் என்னை மீறி அந்த படத்தை யாரும் 2வது பாகமாக எடுக்க முடியாது. எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். தமிழில் மீண்டும் படம் தயாரிப்பீர்களா? என்கிறார்கள். தற்போது ஹாலிவுட்டில் 3 படங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். தமிழில் படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment