கன்னட ரீமேக்கில் தனுஷ்

No comments
மீண்டும் கன்னட ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார் 

தனுஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஸ்ரீமுரளி, ஹரிப்ரியா நடித்த கன்னடப் படம் 'உக்ரம்'. அதுல் குல்கர்னி, அவினாஷ் ஆகியோர் நடித்த இப்படம் கடந்த பிப்ரவரி 21ம் திகதி ரிலீஸ் ஆனது. சமீபத்தில் உக்ரம் படத்தின் டிரெய்லர் பார்த்த தனுஷ் மிரண்டு போய்விட்டாராம். இப்படியெல்லாம் கேங்ஸ்டர் வாழ்க்கையைப் பதிவு செய்ய முடியுமா என ஆச்சர்யப்பட்டவர் இப்போது ரீமேக் செய்யவும் முடிவெடுத்துவிட்டார். 
 தமிழ், இந்தி என இரு மொழிகளில் தனுஷ் ரீமேக் செய்கிறார், ஏற்கனவே சிவராஜ்குமார் நடித்த 'ஜோகி' என்ற கன்னட படத்தின் ரீமேக்தான் தமிழில் 'பரட்டை என்கிற அழகு சுந்தரம்’ ஆனது. தனுஷ் உக்ரம் ரீமேக்கில் ஹீரோவாக மட்டுமே நடிக்கிறார். தமிழ், இந்தியிலும் இயக்கும் பொறுப்பினை பிரசாந்த் நீல் பார்க்கவிருக்கிறாராம். ஆனால் ஹீரோயின் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

No comments :

Post a Comment