பாக்யராஜ் உதவியாளர் இயக்கும் “அதி மேதாவிகள்”

No comments
அப்சலுட் பிக்சர்ஸ் சார்பில் பெர்லி சிங் தயாரிக்கும் படம் ‘அதி மேதாவிகள்’. இயக்குனர் பாக்யராஜிடம் உதவியாளராக பணி புரிந்த ரஞ்சித் மணிகண்டன் இப்படம் மூலம் இயக்குயனராக அறிமுகம் ஆகிறார். இவர், பல விளம்பர படங்களை இயக்கியுள்ளார். சுரேஷ் ரவி நாயகனாக அறிமுகமாக, இஷாரா நாயகியாக நடிக்கிறார். மற்றும் கலாபவன் மணி, லிவிங்ஸ்டன், தம்பி ராமையா, ரேணுகா ஜெகன், மனோபாலா உள்பட பலர் நடிக்கிறார்கள். ‘சலீம்’ பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, சிவராஜ் கலை அமைக்கிறார். 
படம் குறித்து இயக்குனர் ரஞ்சித் மணிகண்டன் கூறியதாவது, “வாழ்கையில் நிறைய மேதாவித்தனமான ஆட்களை நாம் சந்திப்பதுண்டு. அதில் இரண்டு அதி மேதாவிகளின் காதல் கதைதான் இந்த “அதி மேதாவிகள்”. ஒவ்வொரு காலேஜ் ஸ்டுடென்ட் வாழ்கையிலும் இப்படியான சம்பவங்கள் நடப்பதுண்டு. 
இந்த காதலர்களின் வாழ்கையில் நடப்பதும் சுவாரசியமான சம்பவங்கள் தான். இதை காமெடி கலந்த கதையாக உருவாக்கியுள்ளேன்,” என்றார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. தொடர்ந்து கேரளா உட்பட பல இடங்களில் நடைபெற உள்ளது.

No comments :

Post a Comment