கொட்டும் மழையில் விதார்த்துடன் நடனமாடிய ஹார்த்திகா ஷெட்டி!
நாயகன்- நாயகி கொட்டும் மழையில் கட்டிக்கொண்டு ஆடும் பாடல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. அந்த வகையில், பையா படத்தில் கார்த்திக்-தமன்னா ஆடிய, அடடா மழைடா அட மழைடா -என்ற பாடலை இப்போதும் இளவட்ட ரசிகர்கள் குளிரெடுத்தபடி ரசித்துக்கொண்டிருக்கிறார். இந்த சூழலில், விதார்த் நடித்துள்ள ஆள் படத்தில் ஒரு மழை பாடல் உள்ளது. இந்த பாடலில் விதார்த்தும், நாயகி ஹார்த்திகா ஷெட்டியும் விரகதாப உணர்ச்சிகளை வெளிப்படுத்தியபடி கட்டிக்கலந்தாடியிருக்கிறார்கள்.
அதுவும் பாவாடை-தாவணி உடையணிந்து கவர்ச்சியை மின்னல் கீற்றுகளாய் சிதறி விட்டபடி நடனமாடியிருக்கிறார் ஹார்த்திகா ஷெட்டி.
இதுபற்றி அவர் கூறுகையில், எனது சொந்த ஊர் பெங்களூர். அதனால் நான் கன்னட படத்தில்தான் அறிமுகமானேன். இதுவரை 5 படங்களில் நடித்திருக்கிறேன். அப்படி நடித்த படங்களில் பெரிய அளவில் கவர்ச்சியை வெளிப்படுத்தவில்லை.
ஆனால், ரசிகர்களை வசப்படுத்துகிற அளவுக்கு கிளாமராக நடித்திருக்கிறேன். அதேபோல்தான், இப்போது தமிழில் ஆள் படத்திலும் நடித்திருக்கிறேன். குறிப்பாக முதல் படத்தில் ஏதாவது ஒரு வகையில் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படட எனக்கு, இந்த படத்தில் விதார்த்தின் காதலி வேடம்.
அதனால் எங்களுக்கிடையே நடக்கிற இளமை அக்கப்போர் சூழலில் ஒரு விரகதாப பாடல் இடம்பெற்றிருக்கிறது. அந்த சூடான பாடலை மழையில் நனைய விட்டபடி படமாக்கி இன்னும் கூடுதல் தீயை மூட்டியிருக்கிறார்கள்.
அதனால், இப்பாடலில் விதார்த்துடன் அதிக நெருக்கம் காட்டி நடித்திருக்கிறேன்.
கதாநாயகிக்கு பெரிய அளவில் பர்பாமென்ஸ் இல்லையென்றாலும் இதுபோன்ற கிளுகிளுப்பான காட்சிகள் என்னை ரசிகர்களிடம் கொணடு போய் சேர்க்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் ஹார்த்திகா ஷெட்டி.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment