மோகன்லாலுடன் டூயட் பாடும் ராகினி நந்துவானி!

No comments
இயக்குநர் விஜய் இயக்கத்தில், விஜய் நடித்த படம் 'தலைவா'. விஜய்-அமலாபால் ஜோடி சேர்ந்த இப்படத்தில் இன்னொரு நாயகியாக மும்பை நடிகை ராகினி நந்துவானியும் நடித்திருந்தார். அப்படத்தில விஜய்யின் உயிரை காப்பாற்றி விட்டு தன் உயிரை இழக்கும் மனதில் நிற்கும் வேடத்தில் நடித்திருந்தார். இதனால் விஜய் ரசிகர்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்தார் ராகினி. ஆனபோதும், கோடம்பாக்க இயக்குனர்களின் மனதில் ராகினி நந்துவானிக்கு இடம் கிடைக்கவில்லை. 
அதனால் தலைவாவிற்கு பிறகு இரண்டு மாதங்களாக சென்னையில் முகாமிட்டு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தவரை யாருமே ஏறெடுத்துப்பார்க்கவில்லை. அதனால் தோல்வி முகத்தோடு மும்பைக்கே பறந்து விட்டார் ராகினி. ஆனால், அதையடுதது மலையாள படங்களில நடிக்க தொடர்ந்து கல்லெறிந்து வந்த ராகினி நந்துவானிக்கு, இப்போது மோகன்லால் நடிக்கும் பெருச்சாழி படத்தில் நாயகி வேடம் கிடைத்துள்ளது. 
தமிழில் பிரசன்னா-லேகா வாஷிங்டன் நடித்த கல்யாண சமையல் சாதம் என்ற படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் இயக்கும் இப்படத்தில் த்ரிஷ்யம் படத்தில் மோகன்லாலுக்கு இணையான வேடத்தில் மீனா நடித்தது போன்று இப்படத்தில் ராகினி நந்துவானிக்கும் பொறுப்புள்ள குடும்பத்தலைவி வேடமாம்.

No comments :

Post a Comment