அப்பாவாகப்போகிறார் மலையாள நடிகர் ப்ருதிவிராஜ்!

No comments
2006ல் கே.பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் படத்தில் அறிமுகமானவர் ப்ருதிவிராஜ். அதையடுத்து வெள்ளித்திரை, மொழி, அபியும் நானும், சத்தம் போடாதே, ராவணன் உள்பட பல படங்களில் நடித்த அவர், தற்போது வசந்தபாலன் இயக்கும் காவியத்தலைவன் படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நடித்துக்கொண்டிருப்பதோடு அடுத்து, மா என்ற படத்திலும் நடிக்கிறார். ஆக, தமிழ்-மலையாளம் என இரண்டு மொழிகளிலும் அவரது கேரியர் பிசியாக சென்று கொண்டிருக்கிறது. 
 இந்த நிலையில், நேற்று தனது டுவிட்டரில் மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார் ப்ருதிவிராஜ். அதில், நான் விரைவில் அப்பாவாகப்போகிறேன், என் மனைவி சுப்ரியா அம்மாவாகப்போகிறார் என்று தெரிவித்துள்ள அவர், இந்த மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 மேலும், 2011ல். சுப்ரியாவை கைப்பிடித்த பிறகு ப்ருதிவிராஜின் மலையாள சினிமா மார்க்கெட் சூடுபிடித்தது. மோகன்லால்-மம்மூட்டிக்குப்பிறகு மலையாளத்தில் ஒரு முக்கியமான நடிகராகி விட்டார். 
குறிப்பாக போலீஸ் ஸ்டோரி என்றாலே ப்ருதிவிராஜ்தான் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. ஆக மனைவி தனது வாழ்க்கையில் வந்த பிறகு சினிமாவில் பெரிய வெற்றி கிடைத்தது போல், தனது வாரிசு வந்தபிறகு இன்னும் தனது மார்க்கெட் எகிறும் என்றும் எதிர்பார்த்துககொண்டிருக்கிறாராம் ப்ருதிவிராஜ்.

No comments :

Post a Comment