இளையராஜாவுக்காக காத்திருக்கும் டைரக்டர் மகேந்திரன்!

No comments
1978ல் ரஜினி நடித்த முள்ளும் மலரும் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மகேந்திரன். தனக்கென ஒரு தனித்துவத்துடன் படங்களை இயக்கி வந்த அவர், அதைத் தொடர்ந்து உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுகள், நெஞ்சத்தை கிள்ளாதே, ஜானி, கை கொடுக்கும் கை உள்பட 12 படங்களை இயக்கினார். அப்படி அவர் இயக்கிய 12 படங்களில் 10 படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்திருந்தார். 
 கடைசியாக 2006ல் சாசனம் என்ற படத்தை இயக்கிய மகேந்திரன், தற்போது மீண்டும் இளையராஜாவுடன் கைகோர்த்தபடி தனது புதிய படத்திற்காக களமிறங்கியுள்ளார். புலமைப்பித்தன் எழுதிய ஒரு கதையின் ஒரு பகுதியைக்கொண்டு இப்படம் உருவாகயிருப்பதாக சொல்லும் மகேந்திரன், என் படங்களுக்கு வசனம் போன்றே பின்னணி இசையினை அற்புதமாக வழங்கியவர் இளையராஜா.
அதனால் இந்த படத்திற்கும் அவர் இசை தீட்டுவது எனக்கு பெரிய சந்தோசத்தைக்கொடுத்துள்ளது. மேலும், நான் இயக்கிய பல படங்களின் கதையினை கேட்டதும் அப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசிக்கிறபோது இளையராஜாவே பலமுறை இந்த தலைப்பை வையுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
 அந்த வகையில், உதிரிப்பூக்கள் தலைப்புகூட அவர் வைத்ததுதான். அதனால் இந்த படத்திற்கும் தலைப்பு வைக்கிற பொறுப்பினை அவரிடமே விட்டுவிட்டேன். இளையராஜா என்ன தலைப்பு வைத்தாலும் அதுதான் இந்த படத்தின் டைட்டில் என்பதையும் முடிவு செய்து விட்டேன். அதனால் அவர் படத்திற்கு என்ன பெயர் வைக்கப்போகிறாரோ என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் என்கிறார் மகேந்திரன்.

No comments :

Post a Comment