கனவு கலைந்ததால் சோகத்தில் மூழ்கிய அனுஷ்கா
அனுஷ்காவுக்கு, கவுதம் மேனன் இயக்கவுள்ள அஜித் படத்தில், நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனால், அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற, தன் கனவு, நனவாகப் போகிறது என்று உற்சாகத்தில் இருந்தார் அனுஷ்கா.ஆனால், அனுஷ்காவை நேரில் பார்த்த போது, அவரின் முகத்தில், நிறைய முதிர்ச்சி தெரிந்ததால், இப்போது அவருக்கு பதிலாக, வேறு நடிகையை, ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளார், கவுதம் மேனன்.
இந்த படத்தில், அஜித்தை இளமையாக காண்பிக்க திட்டமிட்டுள்ள கவுதம் மேனன், அஜித்தின் கெட்டப்புக்கு பொருத்தமான நடிகையாக இப்போது தேடி வருகிறார். இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என,கவலைப்பட்டு கொண்டிருக்கிறார், அனுஷ்கா.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment