தனக்கு தானே பின்னணிபாடிய ரம்யா நம்பீசன்

No comments
சினிமாவில், பெரிய பாடகியாக வேண்டும் என்ற ஆசையுடன் வந்த ரம்யா நம்பீசனுக்கு, எதிர்பாராத விதமாக, நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால், தொடர்ந்து நடித்து வந்தார். பீட்சா படம், ரம்யாவை பேச வைத்தது. ஆனாலும், படங்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையே, பாண்டியநாடு படத்தில், லட்சுமி மேனனுக்காக, அவர் பாடிய, பை பை பை என்ற பாடல் சூப்பர் ஹிட்டாகி, ரம்யாவை சந்தோஷப்படுத்தியது. 
அதனால், இப்போது, பின்னணி பாடுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ரம்யா. இப்போது, அவர் நடித்துள்ள, டமால் டுமில் படத்தில், முதல் முறையாக, தனக்கு தானே ஒரு பாட்டு பாடியுள்ள அவர், அந்த பாடல் ஹிட்டாக வேண்டுமென்று, கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறாராம்.

No comments :

Post a Comment