ஜெயம் ரவி படத்திற்கு ‘யு’
நிமிர்ந்து நில் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
நான் கடவுள், ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம் வாசன் விஷுவல் வென்ஞ்சுர்ஸ். இந்த நிறுவனம் தற்போது தயாரித்துள்ள படம் ‘நிமிர்ந்து நில்’.
சமுத்திரகனி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெயம் ரவி,
அமலா பால் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.
பெரிதினும் பெரிது கேள் என்ற பொருள்படும் படி வித்தியாசமான கதை அமைப்புடன் உருவாகியுள்ள படமாம் இது.
விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.
சமுத்திரகனி, ஜெயம் ரவி, அமலா பால் முதன் முதலாக இணைந்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருக்கிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment