ராஜிவ் கொலையாளிகளை விடுவிப்பதா? குத்து ரம்யா எதிர்ப்பு

No comments
1991ம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு வந்த ராஜிவ், அன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தார். அதையடுத்து, அவரது கொலைக்கு காரணமானவர்கள் என்று பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் நீண்டகாலம் சிறை தண்டனை அனுபவித்து வந்த அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதாக இருந்தது. ஆனால், தற்போது அவர்களுக்கான தூக்குதண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததோடு, அவர்களை விடுதலை செய்யும் பொறுப்பை மத்திய மற்றும் மாநில (தமிழக) அரசிடம் விட்டுள்ளது. 
தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று மத்திய அரசு வழக்கறிஞர்களும், விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வழக்கறிஞர்களும் தற்போது நீதிமன்றத்தில் வாதாடிக்கொண்டிருக்கிறார்கள்.
 இந்நிலையில், கர்நாடகத்தின் மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியாகியுள்ள நடிகை குத்து ரம்யா,அவர்களை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், முன்னாள் பிரதமரை கொடூரமாக கொன்றவர்களை அத்தனை எளிதில் விட்டு விட முடியாது. அதோடு அந்த குண்டு வெடிப்பில் அவர் மட்டுமின்றி, ஏராளமான பொதுமக்களும் இறந்துள்ளனர். அதனால் கொலைக்கு காரணமானவர்களை வெளியிடக்கூடாது என்று தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment