கீர்த்தி ஷெட்டியாக மாறிய அத்வைதா!
சுசீந்திரன் இயக்கிய, அழகர்சாமியின் குதிரை படத்தில் தமிழுக்கு வந்தவர் அத்வைதா. அதையடுத்து கொண்டான் கொடுத்தான், சகாக்கள், பாண்டியநாடு என சில படங்களில் நடித்தவர், இப்போது சினேகாவின் காதலர்கள் என்ற படத்தில் நடித்திருக்கிறார். கர்நாடகத்தைச்சேர்ந்தவரான இவர், அத்வைதா என்ற பெயரில் தான் நடித்த படங்கள் தனக்கு பெயர் வாங்கித்தராததால் இப்போது கீர்த்தி ஷெட்டி என பெயரை மாற்றியிருக்கிறார்.
இதையடுத்தே சினேகாவின் காதலர்கள், மாங்கா, செவிலி போன்ற படங்கள் புக்கானதாக சொல்லும் அவர், இதில் சினேகாவின் காதலர்கள் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாநாயகியாக நடிக்கிறேன். மொத்த கதையும் என்னைச்சுற்றித்தான் செல்கிறது.
இப்படத்தின் டைரக்டரான முத்துராமலிங்கன் என்னிடம் கதை சொன்னபோது, எல்லா டைரக்டர்களுமே முதலில் இப்படித்தான் கதை சொல்வார்கள். ஆனால் ஸ்பாட்டுக்கு செல்லும்போது, சொன்னதில் சில காட்சிகளை மட்டுமே படமாக்கி விட்டு டம்மி பண்ணி விடுவார்கள் என்ற எண்ணம்தான் என் மனதில் இருந்தது.
ஆனால் முத்துராமலிங்கன் முதலில் எப்படி கதை சொன்னாரோ அதேபோல் படமாக்கினார்.
என்னைச்சுற்றித்தான் மொத்த கதையும் செல்கிறது. இதுவரை வெயிட்டான வேடங்களில் நடிக்காதபோதும் என்னை நம்பி இந்த வேடத்தை கொடுத்தார். அதனால் முடிந்தவரை இயல்புத்தன்மை மாறாமல் நடித்திருக்கிறேன் என்று சொல்லும் அத்வைதா, சில நடிகைகளைப்போன்று கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கதாபாத்திரங்களுக்கு மட்டுமே முதலிடம் கொடுத்து நடிப்பேன் என்கிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment