கோலிவுட்டில் அஜீத்தான் என் பேவரிட் ஹீரோ! -மனம் திறந்த ப்ரியா ஆனந்த்

No comments
வாமணன் படத்தில் அறிமுகமானவர் ப்ரியாஆனந்த். அதையடுத்து சித்தார்த், சிவகார்த்திகேயன், சிவா என இளவட்ட நடிகர்களுடன் நடித்தவருக்கு, லட்சுமிமேனன், ஸ்ரீதிவ்யா போன்ற நடிகைகளால் மார்க்கெட் இறங்குமுகமாகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால், இரும்புக்குதிரை, அரிமாநம்பி, வைராஜா வை, ஒரு ஊருல ரெண்டு ராஜா, பொடியன் என இப்போதும் கைநிறைய படங்களை வைத்திருக்கிறார் ப்ரியாஆனந்த். 
 இதுகுறித்து அவர் கூறுகையில், சினிமாவில் ஒரு படம் ஓடினால், போற்றுவார்கள், அடுத்து இரண்டு படம் சறுக்கி விட்டால் தூக்கி எறிந்து விடுவார்கள். அந்தவகையில் நான் வெற்றி தோல்வி இரண்டையுமே சந்தித்து விட்டேன். அதனால் மார்க்கெட்டில் ஸ்டெடியாக இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று கவனமாக செயல்படுத்தி வருகிறேன். 
 அந்த வகையில், தற்போது வளர்ந்து வரும் ஹீரோக்களின் படமாக என் கையில் உள்ளன. அதனால் இந்த படங்கள் வெளியாகும்போது, என் மார்க்கெட் இன்னும் எகிறிவிடும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பதாக சொல்லும் ப்ரியாஆனந்துக்கு கோலிவுட்டில அஜீத்தான் பேவரிட் ஹீரோவாம். 
அதனால் அவருடன் டூயட் பாட வேண்டும் என்பதை முன்வைத்தே எனது பயணம் சென்று கொண்டிருக்கிறது என்கிறார்.

No comments :

Post a Comment