உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கும் டி.இமான்!

No comments
சினிமா உலகைப்பொறுத்தவரை நடிகர்-நடிகைகள்தான் உடம்பை பராமரிப்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள். அவர்கள் எந்த மாதிரியான உயர்தர உணவுகள் கேட்டாலும் அடுத்த நிமிடமே கிடைத்து விடும் என்றாலும் அவர்களால் அவற்றை சாப்பிட முடியாத நிலையில் இருப்பார்கள். பத்திய சாப்பாடு போன்றே உடம்பில் வெயிட் போடாத உணவாக மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். ஆனால், எந்நேரமும் ரெக்கார்டிங் தியேட்டரில் ஏசி அறைக்குள் அமர்ந்தபடியே கம்போஸிங், ரெக்கார்ட்டிங் என்று செயல்படும் இசையமைப்பாளர்கள் உடல் எடையை பெரிதாக கவனிப்பதில்லை. 
அப்படி கவனிககாமல் விட்டதால் இசையமைப்பாளர் டி.இமான் சமீபகாலமாக உடல் பெருத்து காணப்படுகிறார். கூடவே மைனாவுக்குப்பிறகு தொடர்ச்சியாக அவர் இசையமைக்கிற படங்கள் ஹிட்டடித்து வருவதால் ஏற்பட்ட சந்தோசமும் இதில் சேர்ந்து கொண்டதால், கடந்த சில மாதங்களாக உடற்பயிற்சி செய்து வெயிட்டை குறைத்துள்ளார். 
 அதனால், சினிமா வட்டாரங்களில் அவர் விசிட் அடிக்கும்போது, உடம்பை குறைத்து விட்டீர்களே. எந்த படத்தில் நடிக்கப்போகிறீர்கள்? என்று இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ குமாரை மனதில கொண்டு சிலர் கேட்கின்றனர். 
ஆனால் அந்த கேள்வியைக்கேட்டு மேலும் கீழும் பார்க்கும் இமான், நடிக்கிற ஆசையெல்லாம் நம்மகிட்ட இல்லீங்க. அதிகப்படியான வெயிட் நல்லதில்லையே என்பதால் இப்போது தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறேன். கூடவே கொழுப்பு உணவுகளை தவிர்க்கிறேன். அதனால்தான் உடம்பு தானாக குறைந்து சின்ன பையனாட்டம் மாறி வருகிறேன் என்று கூறுகிறார்.

No comments :

Post a Comment