உத்தமவில்லனுக்காக வித்தியாசமான மேக்கப்பில் கமல்ஹாசன்!

No comments
ஒன்றுக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கும்போது, தனது கெட்டப்பை மாற்றிக்கொள்ள மேக்கப்பில் அதிக ஈடுபாடு காட்டுவார் கமல். அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்த இந்தியன் படத்தில் தாத்தாவாக நடித்த வேடத்துக்காக தன்னை முழுசாக மாற்றிக்கொள்ள உடம்பை குறைத்தது மட்டுமின்றி, அதற்கான ஒப்பனை செய்து கொள்ளவும் ஒவ்வொரு நாளும் அதிகபட்சம் 8 மணி நேரம் வரை செலவிட்டார். 
 அதைத் தொடர்ந்து, அவ்வை சண்முகி படத்தில் பெண் வேடத்திற்காக ஒப்பனை மற்றும் உடை அலங்காரத்திற்கும் பெரும்பகுதி நேரத்தை செலவிட்ட கமல், தசாவதாரம் படத்தில் 10 விதமான வேடங்களுக்காக 10 மணி நேரம் வரை ஒவ்வொரு நாளும் செலவிட்டார். 
அப்படி கடினமாக அவர் உழைத்த படங்கள் எல்லாமே பெரிய அளவில் வெற்றி பெற்றன. அப்படங்களைத் தொடர்ந்து விஸ்வரூபம் படத்திலும் மாறுபட்ட கெட்டப்பில் நடித்து வரும் கமல் அடுத்து நடிக்கவிருக்கும் உத்தமவில்லன் படத்திலும் தன்னை வித்தியாசப்படுத்தி காட்டப்போகிறாராம். 
கே.பாலசந்தர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் கமலின் கதாபாத்திரம் வித்தியாசமாக உருவாகியுள்ளதாம். அதனால் அதற்கேற்ப தன்னை முழுமையாக மாற்றிக்கொள்ள்போவதாக தெரிவித்துள்ள கமல், அதற்காக மேக்கப் மற்றும் காஸ்டியூமுக்காக மட்டும் ஒவ்வொரு நாளும் 10 மணி நேரம் வரை செலவிடப்போகிறாராம். 
இதற்காக ஹாலிவுட்டிலிருந்து ஒரு மேக்கப்மேனும் வருகிறாராம். ஆக, இனி கமல் நடிக்கும் ஒவ்வொரு படத்திலுமே அவரை மாறுபட்ட தோற்றத்தில்தான் காண முடியும் என்கிற அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.

No comments :

Post a Comment