அதிரடியை நாடுகிறார் ப்ரியா மணி

No comments
ப்ரியாமணி,தமிழ்நாட்டு நடிகை என்றாலும்,தெலுங்கு படத்தில் தான் அறிமுகமானார். அதன்பின் தான்,தமிழ் படங்களில் நடிக்க துவங்கினார். பருத்திவீரன் படத்தில் மிகச்சிறப்பாக நடித்து, தேசிய விருதும் பெற்றார். ஆனாலும்,கோடம்பாக்கம், ப்ரியாமணியை கண்டு கொள்ளவில்லை. இந்திக்கு செல்ல, ஷாருக்கான் நடித்த, சென்னை எக்ஸ்பிரஸ் படம் மூலம் அஸ்திவாரம் போட்டார். அந்த திட்டமும் ஒர்க் அவுட் ஆகவில்லை. 
அதனால், தற்போது, ஒரு கன்னட படத்தில், சி.பி.ஐ., அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இதுவரை தான் நடிக்காத அதிரடியான வேடம் என்பதால், இந்த ரோலுக்காக, தன்னை கவர்ந்த சில பெண் சி.பி.ஐ., அதிகாரிகளை, ரோல் மாடலாக வைத்து நடிப்பதாக கூறுகிறார். இனி, மென்மையான வேடங்களை தவிர்த்து, அதிரடியான வேடங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்போவதாக சொல்கிறார்.

No comments :

Post a Comment