விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் திரிந்த தமிழ் நடிகை

No comments
தமிழில் கவுதம் கார்த்திக்குடன் என்னமோ ஏதோ படத்தில் நடித்து வருபவர் ராகுல் ப்ரீத்தி சிங். புத்தகம், தடையறத் தாக்க படங்களில் ஏற்கெனவே நடித்துள்ளார். தெலுங்கில் பிசியான நடிகை. ராகுல் ப்ரீத்தி சிங் இரண்டு நாட்களுக்கு முன்பு டில்லி விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் திரிந்த சம்பவம் இப்போது வெளியாகி இருக்கிறது. ஐதராபாத் செல்வதற்காக டில்லி விமான நிலையம் வந்த அவரது கை பையில் சில துப்பாக்கி குண்டுகள் இருப்பதை விமான நிலைய ஸ்கேனர் கருவி காட்டிக் கொடுத்தது. 
உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ப்ரீத்தியை தனியா அழைத்துச் சென்று விசாரித்தனர். தன் கை பையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பதை பார்த்து அவரும் அதிர்ச்சி அடைந்தார். 
ப்ரீத்தியின் தந்தை ராணுவ அதிகாரி. துப்பாக்கி வைத்திருப்பவர். விசாரணையில் அது அவரது துப்பாக்கி குண்டும் இல்லை என்று தெரிந்தது. உடனடியாக துப்பாக்கி நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
 அவர்கள் பரிசோதித்து இது சினிமாவில் பயன்படுத்தப்படும் டம்மி துப்பாக்கி குண்டு என்று அறிவித்தனர். அப்போதுதான் என்னமோ ஏதோ படத்தில் துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு ஆடியதாகவும் அதில் உள்ள குண்டுகள் எப்படியோ கைப் பைக்குள் விழுந்திருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். 
அது தொடர்பாக விசாரித்து அது உண்மை என்று அறிந்த கொண்ட அதிகாரிகள். ப்ரீத்தி சிங்கை எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து அவர் கூறியிருப்பதாவது: "விமான நிலையத்தில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் மரண வேதனையை அனுபவதித்தேன். 
நான் ஒரு தீவிரவாதி போல பார்க்கப்பட்டேன். நான் நடிகை என்பதை எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. 8 மாதத்திற்கு முன்பு படப்பிடிப்பில் என் பைக்குள் வந்து விழுந்த சிறு டம்பி துப்பாக்கி குண்டை நான் கவனிக்கவில்லை. ஒரு சிறு கவனக்குறைவுக்காக பெரிய தண்டனையை அனுபவித்து விட்டேன்" என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்.

No comments :

Post a Comment