இன்னும் அரை கோடியைகூட தொடல! -பீல் பண்ணும் ப்ரியாஆனந்த்

No comments
'வாமணன்' படத்தில் அறிமுகமான ப்ரியா ஆனந்த், எதிர்நீச்சல் படத்திற்கு பிறகுதான் பேசப்படும் நடிகை ஆனார். ஆனபோதும், அவர் நினைத்ததுபோல் அடுத்தடுத்து தனுஷ், சூர்யா என்று அவர் மேல்தட்டு ஹீரோக்களுடன் ஜோடி சேர முடியவில்லை. விக்ரம்பிரபு, கெளதம், அதர்வா போன்ற வளர்ந்து வரும் ஹீரோக்களுடன்தான் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தற்போது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் மூலம் விமலுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் ப்ரியாஆனந்த். 
இந்த படத்தில் வழக்கமான கதாநாயகிகளைப்போல் இல்லாமல் ப்ரியாவுக்கும் வெயிட்டான ரோலாம். விமல், சூரிக்கு எப்படியோ அதேபோல் நானும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறேன் என்று சொல்லும ப்ரியாஆனந்த, இந்த படத்தில் குட்டை பாவாடை அணிந்து கூடுதல் கவர்ச்சி சேவையும் செய்கிறாராம். 
 அப்படியென்றால், அடுத்து முழுநேர கிளாமர் ஹீரோயினாக இறங்க அஸ்திவாரம் எழுப்புகிறீர்களோ? என்று கேட்டால், கவர்ச்சி காட்டுவது ஒன்றும் பெரிய விசயமல்ல. ஆனால், அது அந்த கதைக்கு தேவையானதாக இருக்க வேண்டும். அந்த வகையில், அதற்கேற்ற கதைகள் கிடைக்கும்போது கண்டிப்பாக கவர்ச்சி அவதாரமும் எடுப்பேன் என்று சொல்லும் ப்ரியாஆனந்த், 
கோடம்பாக்கத்துக்கு வந்து ஓரிரு படங்களில் நடித்ததுமே சில நடிகைகள் அரை கோடியை கிராஸ் ப்ணணி விடுகிறார்கள். ஆனால், நானோ 5 வருடத்தில் 10 படங்கள் வரை நடித்தும் இன்னும் அரை கோடியை எட்டி பிடிக்க முடியவில்லை. அதுதான் எனக்கு இப்போது பெரிய வருத்தமாக உள்ளது என்றும் தனது மனக்குமுறலை சொல்லி பீல் பண்ணுகிறார்.

No comments :

Post a Comment