மதுஷாலினியிடம் ரத்தம் குடித்த காட்டுக் கொசுக்கள்!

No comments
தமிழில் பழனியப்பா கல்லூரி, பதினாறு, அவன் இவன் போன்ற படங்களில் நடித்தவர் மது ஷாலினி. தெலுங்கு தேச நடிகையான இவர் நடித்த எந்த தமிழ் படமும் வெற்றி பெறாததால், வெற்றியைத் தொட விடாமல் போராடிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், தற்போது அவருக்கு கல்பனா ஹவுஸ் என்றொரு பேய் படத்தில் நடிககும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நிஜத்தில் பேய் என்றாலே அலறும் மனநிலை கொண்ட மதுஷாலினிதான் இந்த படத்தில் பேய் வேடத்திலேயே நடிக்கிறாராம்.
 இந்த கதையை கேட்டபோது அவரை பயம் பற்றிக்கொண்டதாம். ஆனபோதும் ஒரு திரில்லர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை சினிமாவுக்கு வந்ததில் இருந்தே இருப்பதால் இப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டாராம் அவர். மேலும், இப்படத்தின் படப்பிடிப்புகள் அச்சுறுத்தும் அடர்ந்த காடுகள், மலைப்பகுதியிலேய அதிகமாக நடைபெற்றதாம். 
அதனால் இப்படத்துக்காக மைசூர் காட்டப்பகுதிகளில் சில வாரங்களாக முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தியபோது, அங்குள்ள முட் செடிகள் மது ஷாலினியின் உடம்பை குத்தி கிழித்ததோடு, அந்த காட்டுப்பகுதிகளில் உள்ள கொசுக்கள் அவரது ரத்தத்தை குடிக்க உடம்பெல்லாம் வீங்கி விட்டதாம். இருப்பினும், அதற்கான சிகிச்சைகளை செய்தபடியே படம் முடிகிற வரை படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்தாராம் மது ஷாலினி.

No comments :

Post a Comment