காங்கிரசில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி!
சினிமாவில் ஆக்ஷன் ஹீரோயினாக மிகப்பெரிய ரவுண்டு வந்தவர் விஜயசாந்தி. ஆனபோதும், சினிமாவில் மார்க்கெட் இருக்கும்போது அரசியலிலும் பிரவேசித்தார். ஆரம்பத்தில் அரசியல் பிரசாரம் செய்து வந்தவர் பின்னர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன்பிறகு தேர்தலிலும் மக்களை சந்தித்து எம்.பி ஆனார்.
அந்த வகையில், ஆந்திராவிலுள்ள மேடாக் எம்.பியான அவர், தெலுங்கானாவுக்காகவும் கடுமையாக போராடி வந்தவர்.
ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி தனித்தெலுங்கானா அறிவித்து விட்டதால் மகிழ்ச்சியடைந்தார் விஜயசாந்தி. இருப்பினும் டி.ஆர்.எஸ்., கட்சியில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடால் அக்கட்சியில் இருந்து சில காலம் விலகியே இருந்தார்.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டதாக அறிவித்துள்ள விஜயசாந்தி, தற்போது அக்கட்சியில் இருந்து மேலும் சில முக்கிய தலைவர்களை காங்கிரசுக்கு இழுக்கும் வேலைகளிலும் இறங்கியுளளாராம். இதனால், விஜயசாந்தி- சந்திரசேகரராவுக்கிடையே மோதல் வலுத்துள்ளதாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment