கோடம்பாக்கத்தில் விசிட் அடிக்கும் சுஜா!

No comments
தமிழில் கதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்டு களத்தில் இறங்கியவர்தான் சுஜா. ஆனால், கோடம்பாக்கம் அவரை குத்துப்பாட்டு நடிகையாக்கி விட்டது. அதனால் தமிழ்நாடே வேண்டாமென்று கோபித்துக்கொண்டு ஆந்திராவில் ஒதுங்கிய அவருக்கு இப்போது அங்கு கதாநாயகி வேடமே கிடைத்து விட்டதாம். குண்டலொ கோதாவிரி படத்தையடுத்து ஆலிபாபா ஒக்கடே தொங்கா என்ற பெயரில் அவர் நடித்த படமும் ஹிட்டடித்துள்ளதாம். அதனால், மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் சுஜா. 
ஆனால், ஆலிபாபா ஒக்கடே தொங்கா படத்தில் அவர் ஆலி என்ற காமெடியனுடன் நடித்துள்ளாராம். இந்த படத்தில் நடித்தபோது, காமெடியனுடன் நடித்து இமேஜை கெடுத்துககொள்ளாதே என்று பலரும் சுஜாவுக்கு அட்வைஸ் செய்தார்களாம்.
 ஆனால், எதையும் காது கொடுத்து கேட்கவில்லையாம் அவர். ஆனால், அப்படி நடித்த படம் இப்போது வெற்றி பெற்றிருப்பதால், அடுத்தடுத்து காமெடியன், வில்லன் என்ற பாரபட்சம் பார்க்காமல் எனக்குரிய கேரக்டர் பிடித்திருந்தால் எந்தமாதிரி ஹீரோவுடனும் நடிப்பேன் என்று அறிவித்திருக்கிறார் சுஜா. 
அதனால், மந்தமாகிக்கிடந்த அவரது மார்க்கெட் தற்போது சூடு பிடித்துள்ளதாம். இந்த நிலையில், மீண்டும் கோலிவுட்டிலும் கொடி நாட்ட நினைக்கும் சுஜா, சில ஆடியோ விழாக்களிலும் விசிட் அடித்து வருகிறார். அப்போது கண்ணில் தென்படும் இயக்குனர்களை மடக்கி தான் ஆந்திராவில் கதாநாயகி ஆன கதையை சொல்லி, படவேட்டையினை முடுக்கி விட்டுள்ளார் நடிகை.

No comments :

Post a Comment