ஆக்டர், டாக்டர்: இரண்டு வழியிலும் பயணம் செய்யும் பரத் ரெட்டி!

No comments
இது கதிர்வேலன் காதல் படத்தில் உதயநிதி ஸ்டாலினின் மச்சானாக நடித்திருப்பவர் பரத் ரெட்டி. கமல் இயக்கிய உன்னைப்போல் ஒருவனில் கமாண்டோ வீரராக அறிமுகமானவர், அதன் பிறகு வந்த பயணம் படத்தில் அதிரடிப்படை அதிகாரியாக நடித்தார். கருணாஸ் நடித்த ரகளபுரம் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார். ஆந்திராவைச் சேர்ந்த பரத்ரெட்டி அங்கு புகழ்பெற்ற இருதநோய் நிபுணர்.
 ஐதராபாத் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார். இருதய நோய் நிபுணராக இருந்து கொண்டு தனது பொன்னான நேரத்தை சினிமாவில் செலவிடலாமா என்று அவர்மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதுபற்றி பரத் ரெட்டி அளித்த விளக்கம். டாக்டர்கள் நடிக்க கூடாதா என்ன? உங்க ஊர் டாக்டர் ராஜசேகர் எங்க ஊரில் வந்து ஹீரோவாக நடிக்கவில்லையா.
 தெலுங்கில் இதுவரை 40 படத்துக்கு மேல் நடித்திருக்கிறேன். தமிழில் குறைவுதான். போலீஸ் கேரக்டராகவே வந்ததால் மறுத்தேன். இது கதிர்வேலன் காதல் படத்தில் வித்தியாசமான கேரக்டர். காமெடியாகவும், வில்லனாகவும் நடிக்க ஆவலாக இருக்கிறேன். எந்த காலத்திலும் பத்துபேரை அடிச்சு சாய்க்கும் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க மாட்டேன். 
 எனது மருத்துவ பணி போக மீதி நேரங்களில்தான் நடிக்கிறேன். எனது நோயாளிகளை நான் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை 300 ஆபரேஷன்கள் செய்திருக்கிறேன். சினிமாவில் எத்தனை உயரத்துக்கு போனாலும் மருத்துவத்துறையில் இருந்து விலகவே மாட்டேன். தண்டவாளம் மாதிரி ஆக்டர், டாக்டர் என்ற இரண்டு வழியில் தொடர்ந்த பயணம் செய்வேன் என்கிறார் பரத் ரெட்டி.

No comments :

Post a Comment