கேரள அரசின் திரைப்பட விருது கமிட்டி தலைவராக பாரதிராஜா நியமனம்

No comments
கேரள அரசு ஆண்டு தோறும் திரைப்பட விழாக்களை தவறாமல் நடத்தி வருகிறது. அதேபோல உலக திரைப்பட விழாவையும் முன்னின்று நடத்தி வருகிறது. 2013ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படங்களையும், சிறந்த திரைப்பட கலைஞர்களையும் தேர்வு செய்ய ஒரு கமிட்டி ஒன்றை நியமித்திருக்கிறது. இந்த கமிட்டியின் தலைவராக தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவை நியமித்துள்ளது. 
இந்த கமிட்டியில் தமிழ் திரைப்பட எடிட்டர் லெனின், மலையாள டைரக்டர் ஹரிகுமார், ஒளிப்பதிவாளர் ஆனந்த குட்டன், இசை அமைப்பாளர் ஆலப்பி ரங்கநாத், தயாரிப்பாளர் சூரியா கிருஷ்ணமூர்த்தி, பழம்பெரும் நடிகை ஜலஜா ஆகியோர் உள்ளனர். கேரள அரசின் திரைப்பட விருது கமிட்டி தலைவராக கே.பாக்யராஜ் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment