எதிர்ப்பு எதிரொலி: மம்முட்டி, இஷா தல்வார் காதல் காட்சிகள் நீக்கம்
மம்முட்டி, இஷா தல்வார் நடித்துள்ள பால்ய கலாசக்தி என்ற படம் சமீபத்தில் ரிலீசானது. இது வைக்கம் முகமது பஷீரின் கதை. மீனா, சீமா பிஸ்வாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரமோத் பய்யனூர் என்பவர் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படம் கடந்த மாதம் 7ந் தேதி வெளியானது. படத்தில் 62 வயதான மம்முட்டி தன்னைவிட 36 வயது குறைந்த இஷா தல்வாருடன் நடித்திருந்த நெருக்கமான காதல் காட்சிகள் மலையாள ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
இதற்கு நாடெங்கும் எதிர்ப்பும், விமர்சனமும் எழுந்தது. இதை உணர்ந்து கொண்ட மம்முட்டி சில காட்சிகளை நீக்கச் சொன்னாராம். அதை ஏற்ற தயாரிப்பாளரும், இயக்குனரும் 15நிமிட காதல் காட்சிகளை நீக்கிவிட்டார்களாம். ஆனால் இதனை படத் தயாரிப்பு தரப்பு மறுத்திருக்கிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment