சினிமாவில் நான் எதிர்பார்த்தது நடக்கவில்லை: காயத்ரி வேதனை

No comments
ஜில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணாவின் அடுத்த படமான ஏன் இப்படி மயக்கினாய்தான் காயத்ரி அறிமுகமான படம். ஆனால் அந்தப் படம் ரிலீசாகவில்லை. அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் அது அவருக்கு கை கொடுக்கவில்லை. மிகவும் எதிர்பார்த்த 18 வயசு, பொன்மலைபொழுதும் சரியாக ஓடவில்லை. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்தான் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அடுத்து ரம்மி படத்தில் நடித்தார். இப்போது மெல்லிசை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நான் எதிர்பார்த்து வந்த எதுவுமே சினிமாவில் நடக்கவில்லை என்று காயத்ரி வேதனையுடன் கூறியிருக்கிறார். 
"சூரியாவை இயக்கிய டைரக்டர் படத்துல அறிமுகமாகிறோம். என்னோட சினிமா கேரியர் சூப்பரா இருக்கும்னு நம்பினேன். என்னோட பேமிலியும் நம்புச்சு. ஆனா முதல் படம் ரிலீசாகல. அந்தப் படத்துல கிடைச்சதெல்லாம் இனிய நினைவுகள்தான். அந்தப் படத்துல நடிக்கிறப்போ படம் ரிலீசுக்கு பிறகு பெரிய நடிகையாவோம் இனி அஜீத், சூர்யா மாதிரி பெரிய ஹீரோக்களுடன்தான் நடிப்பேன்னு பேட்டியெல்லாம் கொடுப்போம்னு கற்பனை பண்ணி வச்சிருந்தேன்.
 ஆனால் எதுவும் நடக்கல. நாம பிளான் பண்ணின எதுவும் சினிமால நடக்காதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். நான் கற்பனை பண்ணிக்கிட்டு வந்ததெல்லாம் உடைஞ்சிக்கிட்டே வந்தது. ஆனாலும் கஷ்டப்பட்டு இப்போ எனக்குன்னு ஒரு இடத்தை பிடிக்க போராடிக்கிட்டிருக்கேன். 
 விஜய் சேதுபதி எனக்கு சான்ஸ் வாங்கி கொடுக்குறார், பொன்மாலைபொழுதில் பணியாற்றிய உதவி டைரக்டரை லவ் பண்றேன் இப்படி என்னை பற்றியும் கிசு கிசுக்கள் வருகிறது. முதல்ல இதையெல்லாம் சீரியசா எடுத்துக்கிட்டேன். இப்போ பழகிடுச்சு" என்கிறார் காயத்ரி.

No comments :

Post a Comment