நடிப்புக்கு முழுக்குப்போட்டார் குத்து ரம்யா!
சிம்பு நடித்த குத்து படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகை ரம்யா. அதைத்தொடர்ந்து வாரணம் ஆயிரம், கிரி, பொல்லாதவன் என பல படங்களில் நடித்தவர் ஒரு கட்டத்தில் கோடம்பாக்கத்தில் படங்கள் இல்லாததால் கன்னட படங்களில் முழுவீச்சில் நடித்து வந்தார். அங்கு அவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால் ரம்யாவுக்கான ரசிகர்களும் நாளுக்கு நாள் பெருகி வந்தனர்.
அதனால், தாய்மொழி படங்களிலேயே நடித்து வந்த ரம்யாவுக்குள் ஒரு கட்டத்தில் அரசியல் ஆசை ஏற்பட்டது.
அதனால் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துககொண்டு கட்சி பணிகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வந்தவர், ஒரு எம்எல்ஏ எலெக்சனில் கடுமையாக பிரசாரம் செய்தார்.அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால், பிரசார பீரங்கியான ரம்யாவுக்கு கட்சியின் மேல்மட்டத்தில் செல்வாக்கு உயர்ந்தது.
அதன்காரணமாக, பின்னர் பெங்களூரில் உள்ள மாண்டியா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட ரம்யா பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதையடுத்து இப்போது எம்.பியாகி விட்டார் அவர். அதனால் சினிமாவில் தான் நடித்து பாதியில் நின்ற ஒரு படத்தையும் முடித்துக்கொடுத்துள்ள ரம்யா,. இனிமேல் நடிப்பதில்லை என்று அறிவித்துள்ளார்.
என்னை நம்பி ஓட்டளித்த மக்களுக்காக இனி சீரியராக உழைக்கப்போகிறேன் என்று தெரிவித்திருப்பவர், இப்போது சினிமா நண்பர்களை சந்திப்பதையும்
குறைத்து, தன்னைச்சுற்றி எப்போதும் அரசியல் கூட்டத்தையே வைத்திருக்கிறாராம் ரம்யா.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment