வடிவேலு கொடுத்த காமெடி டிப்ஸ்! உற்சாகத்தில் மீனாட்சி தீட்ஷித்

No comments
விஜயகாந்த் நடித்த விருதகிரி, அஜீத் நடித்த பில்லா-2 ஆகிய படங்களில் நடித்தவர் மீனாட்சி தீட்ஷித். இவர் தற்போது வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்துள்ள ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், இந்தி என பரவலாக நடித்துள்ள மீனாட்சிக்கு வடிவேலுவுடன் நடித்துள்ள இந்த படம் கோலிவுட்டில் பெரிய இடத்தை பிடித்துத்தரும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளதாம். காரணம் கேட்டால், இப்படம் சரித்திர பின்னணியில் உருவாகியிருந்தாலும், பக்கா கமர்சியல் படம்.
 அந்த காலத்து கவர்ச்சிகரமான உடைதரித்து நடித்திருக்கிறேன். வடிவேலுவுடன் டூயட் பாடும் அதே வேளையில் காமெடி காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் இதுவரை காமெடி வாய்ப்புகள்தான் எனக்கு சரியாக கிடைக்காமல் இருந்தது. 
ஆனால், இப்போது காமெடி படமே கிடைத்து விட்டது. அதனால், வடிவேலு சார் கொடுத்த காமெடி டிப்ஸை உள்வாங்கிக்கொண்டு காதல் காட்சிகள் மட்டுமின்றி, காமெடியிலும் அதிக ஈடுபாடு காட்டி நடித்திருக்கிறேன் என்று சொல்லும் மீனாட்சி தீட்ஷித், வடிவேலு சாருடன் நடித்தபோது ரொம்ப ஜாலியாக இருந்தது. அவர் எப்போதும் கலகலப்பாகவே இருந்ததால், அந்த கதையில் அதிக ஈடுபாட்டுடன் நடிக்க முடிந்தது. அந்த வகையில் நான் நடித்த ஹீரோக்களில் கலகலப்பானவரும் வடிவேலுதான். நான் நடித்ததில் கலகலப்பான படமும் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்தான் என்கிறார் மீனாட்சி தீட்ஷித்.

No comments :

Post a Comment