பர்பாமென்ஸ் நடிகராக மாறிய சந்தானம்!

No comments
நாடகத்துறையில் இருந்துதான் சினிமா தோன்றியது. என்றாலும், சமீபகாலமாக நாடகத்துறை அழிந்து கொண்டே வருகிறது. அத்தி பூத்த மாதிரி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், கிரேஸிமோகன் உள்ளிட்டோர் அவவப்போது நாடகங்களை நடத்தி அதற்கு உயிர் கொடுத்து வருகிறார்கள். அதிலும் தமிழ் நாட்டில் பார்க்க ஆளில்லை என்பதால், சிங்கப்பூர், மலேசியா சென்று நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில், தற்போது நாடகத்துறையை மையப்படுத்தி காவியத்தலைவன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார் வசந்தபாலன்.
 1930களில் நாடகத்துறை ஓங்கி வளர்ந்திருந்த காலகட்டத்தில் அதில் சிறந்து விளங்கிய கிட்டப்பா போன்ற சில முன்னோடிகளைப்பற்றிய கதையில் அப்படம் உருவாகியிருக்கிறது. இதில் சித்தார்த், பிருதிவிராஜ், நாசர், சந்தானம், தம்பி ராமைய்யா, வேதிகா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 கதைப்படி, இப்படத்தில் நடிக்கும் நாடகங்களில் சித்தார்த், பிருதிவிராஜ் இருவரும் பெண் வேடத்திலும கலக்கியிருக்கிறார்களாம். அதேபோல், காமெடியனாக நடித்துள்ள சந்தானமும் இதுவரை வெறும் கலகலப்பாக மட்டுமே நடித்து வந்தவர், இதில் ஒரு நாடகத்தில் பெண் வேடமிட்டு முதன்முறையாக மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம். அதனால் இந்த படத்திற்கு பிறகு சந்தானம் காமெடியன் மட்டுமின்றி பர்பாமென்ஸ் நடிகராகவும் உயர்ந்து விடுவார் என்கிறார் வசந்தபாலன்.

No comments :

Post a Comment