ஊர் ஊராய் சுற்றும் ஹன்சிகா

No comments
படப்பிடிப்புக்காக ஊர் ஊராய் சுற்றுகிறேன் என்று கூறியுள்ளார் ஹன்சிகா. ஹன்சிகா தமிழில் வாலு , அரண்மனை, மான் கராத்தே, உயிரே உயிரே, மீகாமன், வேட்டை மன்னன் ஆகிய ஆறு படங்களில் நடிக்கிறார். தெலுங்கிலும் நான்கு படங்கள் கைவசம் உள்ளன. இருமொழிகளிலும் பிசியான நடிகையாகிவிட்டார். இதுகுறித்து ஹன்சிகா கூறுகையில், சூட்கேசுடன் சுற்றுவதே என் வாழ்க்கையாகி விட்டது. ஆடைகளை சூட்கேசுக்குள் அடக்கி வைப்பதும், படப்பிடிப்புக்காக வெளியூருக்கு பயணம் மேற்கொள்வதும், பிறகு வீட்டுக்கு திரும்புவதும் மீண்டும் சூட்கேசில் துணிகளை அடுக்கி வேறு படப்பிடிப்புக்காக புறப்படுவதும் என நாட்கள் போய்க்கொண்டு இருக்கிறது.
 ஓய்வெடுக்க நேரமே கிடைக்கவில்லை ஆனால் இந்த வாழ்க்கை எனக்கு போரடிக்கவும் இல்லை என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment