பயத்தில் சமந்தா! உதவிக்கு வந்த நடிகர்

No comments
சமந்தாவுக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்துள்ளாராம் நாக சைதன்யா. சமந்தாவுக்கு கார் ஓட்டத் தெரியாததால் படங்களில் கார் ஓட்டும் காட்சி வந்தால் அவருக்கு பதிலாக டூப்தான் கார் ஓட்டுவார். தற்போது, மனம் என்ற தெலுங்கு படத்தில் நாக சைதன்யாவுடன் சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தில் சமந்தா கார் ஓட்டும் காட்சி குளோஸ் அப் ஷாட்டில் படமாக்க இயக்குனர் திட்டமிட்டார். இதனால் சில நிமிடமாவது கார் ஓட்டுங்கள் அதை வைத்து சமாளித்து விடுகிறேன் என்று இயக்குனர் தெரிவித்ததால், உங்களுக்கு கார் ஓட்ட கற்று தருவதாக நாக சைதன்யா, சமந்தாவிடம் தெரிவித்துள்ளார். 
 சமந்தாவும் சம்மதித்தால், சில மணி நேரம் சமந்தாவுக்கு அருகில் உட்கார்ந்து கார் ஓட்ட கற்றுத் தந்தார் நாக சைதன்யா. பயிற்சிக்கு பிறகு சமந்தா கார் ஓட்டும் காட்சி படமாக்கப்பட்டது.

No comments :

Post a Comment