பிரபல நடிகர் சி.ஆர்.சிம்ஹா காலமானார்

No comments
கன்னடத் திரைப்பட நடிகர் சி.ஆர்.சிம்ஹா(வயது 72) நேற்று காலமானார். பெங்களூரு ஹொசகெரேஹள்ளியில் வசித்து வந்த சி.ஆர்.சிம்ஹா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பெங்களூரு ஜெயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று பிற்பகல் 3 மணியளவில் சிம்ஹா உயிரிழந்தார், இவர் பிரபல கன்னட நடிகர் ஸ்ரீநாத்தின் சகோதரர் ஆவார். 
 1942-ஆம் ஆண்டு, ஜூன் 16ம் திகதி சென்னபட்டனாவில் பிறந்த சி.ஆர்.சிம்ஹா, தனது 12-ஆவது வயதில் நாடகத்தில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் இந்தின ராமாயணா, ராயருபந்தரு மாவனமனகே, நீ தந்த கானிகே உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார். காகனகோட்டே, ஷிகாரி, சிம்ஹாசனா உள்ளிட்ட 5 திரைப்படங்களையும் அவர் இயக்கியுள்ளார். 
 சிம்ஹாவின் உடலுக்கு கன்னடத் திரைத் துறையினர், நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். ரவீந்தர கலாஷேத்ராவில் இன்று(மார்ச் 1) அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது, பனசங்கரி மயானத்தில் மாலையில்

No comments :

Post a Comment