எனக்கு எதிராக சில ஹீரோக்கள் வேலை செய்கிறார்கள்! -ஸ்ரேயா ஆதங்கம்

No comments
தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் அறிமுகமானவர் ஸ்ரேயா, என்றாலும் அதன்பிறகு ஜெயம்ரவிக்கு ஜோடியாக அவர் நடித்த மழை படம்தான் அவரை பேச வைத்தது. அப்படத்திலேயே தொப்பலாக மழையில் நனைந்தபடி நடனமாடியவர் இளசுகளின் இதயங்களிலும் ஈரத்துணியாய் ஒட்டிக்கொண்டார். அதையடுத்து, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி என முன்னணி ஹீரோக்களின் படங்களாக நடித்தவர், ஒரு கட்டத்தில் மார்க்கெட் ஆட்டம் கண்டதால், மீண்டும் இந்தி, கன்னடம் என்று சென்று விட்டவர், தற்போது ராமானுஜம் படம் மூலம் மீண்டும் கோடம்பாக்கத்தில் என்ட்ரி கொத்திருக்கிறார். 
 முன்னதாக, இந்த படத்திற்கு முன்பு பாலா இயக்கவிருக்கும் தாரை தப்பட்டை படத்தில் ஸ்ரேயாதான நடிப்பதாக இருந்தார். அப்படத்துக்காக கரகாட்ட பயிற்சி எடுப்பதற்கும் சென்னை வர தயாரானார் ஸ்ரேயா. ஆனால், அதற்குள் ஸ்ரேயா வேடத்துக்கு வரலட்சுமி ஒப்பந்தமாகி விட்டதாக ஸ்ரேயாவுக்கு தகவல் அனுப்பி விட்டனர். 
 இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சென்னை வந்து விசாரித்திருக்கிறார். அப்போதுதான், இரண்டு இளவட்ட ஹீரோக்கள்தான் தனக்கு வர இருந்த வாய்ப்பை வரலட்சுமிக்கு திருப்பி விட்டது தெரியவந்திருக்கிறது. இதனால் ஆவேசமடைந்த ஸ்ரேயா மேற்படி நடிகர்களின் பெயரைக் குறிப்பிட்டு தனது கோலிவுட் நண்பர்களிடம் சூடான வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டு திரிகிறார்.

No comments :

Post a Comment