லண்டனில் சமந்தா

No comments
லண்டனில் ரகசிய சிகிச்சை எடுத்து வருகிறாராம் சமந்தா. நான் ஈ படத்துக்கு பிறகு சமந்தாவுக்கு பட வாய்ப்பு குவியத் தொடங்கியது. ஆனால் தோல் பாதிக்கப்பட்ட அவர் மணிரத்னம், ஷங்கர் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை நழுவவிட்டார். சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தவர் சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதேபோல் முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார். அஞ்சான் படப்பிடிப்பு மும்பையில் நடந்தபோது மீண்டும் தோல் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனை ஒன்றில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டு ஷூட்டிங்கில் பங்கேற்றார். சமீபத்தில் மீண்டும் சில நாட்கள் ஷூட்டிங்கில் விடுமுறை எடுத்துக்கொண்டு லண்டன் பறந்தார்.
 அங்குள்ள பிரபல மருத்துவமனையில் அவர் ரகசிய சிகிச்சை எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

No comments :

Post a Comment