தமிழ் படங்களில் நடிக்க மறுக்கவில்லை: ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன் இந்தி, தெலுங்கு படங்களில் நடிக்கவே முன்னுரிமை அளிக்கிறார் என்றும், தமிழ் படங்களில் நடிக்க மறுக்கிறார் என்றும் செய்தி பரவி உள்ளன. தற்போது அவர் கைவசம் இரண்டு இந்திப்படங்கள் உள்ளன. ‘பூஜை’ என்ற தமிழ் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இது தவிர மேலும் சில தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் ஸ்ருதி அவற்றில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் செய்தி பரவி உள்ளது. ‘பூஜை’ படத்தை முடித்து விட்டு இந்தி, தெலுங்கு படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து ஸ்ருதிஹாசனிடம் கேட்ட போது மறுத்தார். ‘‘நான் தமிழ் படங்களில் நடிக்க மறுப்பதாக வதந்திகள் பரவி உள்ளன. இதில் உண்மை இல்லை. தமிழ் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. அப்போது, வேறு படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருந்ததால் என்னிடம் கால்ஷீட் இல்லை. அதனால் அவற்றில் நடிக்க முடியாமல் போனது.
இதை வைத்து தமிழ் படங்களை புறக்கணிக்கிறேன் என்று தவறான செய்தி பரவிவிட்டது.
தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை உள்ளது. கால்சீட் இருந்தால் நிச்சயம் நடிப்பேன்’’ என்றார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment