கோடை வெளியீடாக வருகிறது திருமணம் எனும் நிக்காஹ்!

No comments
மிக வித்தியாசமான கதை, வித்தியாசமான கதைக்களம் என்ற வகையில் எல்லோராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுவரும் படம் – திருமணம் எனும் நிக்காஹ். புரிதல் அவசியம் என்ற உன்னத கருத்தை வலியுறுத்தும் இந்த படம் காதலுக்கும் ஊடலுக்கும் இடையே புரிதலின் முக்கியமான பங்களிப்பை பற்றி கூறும் படமாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட திருமணம் எனும் நிக்காஹ் படம் முடிவடைந்து பல மாதங்களாகிவிட்டநிலையில், எப்போது வெளியாகும் என்றே தெரியாதநிலையில் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், திருமணம் எனும் நிக்காஹ் அடுத்த மாதம் வெளி வரும் என அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அறிவித்திருக்கிறார்.
 திருமணம் எனும் நிக்காஹ் படத்தைப் பற்றி அப்படத்தின் இயக்குனர் அனீஸ், “இந்த படம் நமது நாட்டின் பிரதானமான இரு மதங்களின் சம்பிரதாயங்களையும், கலாசாரத்தையும் பின்னணி ஆக வைத்து எடுக்கப்பட்ட படம். நஸ்ரியாவின் நடிப்பும் சரி, தோற்றப்பொலிவும் சரி, அவருக்கு ஏன் இப்படி ஒரு புகழ் கிடைத்தது என்பதற்கு இந்தப் படம் விடை சொல்லும். எங்கேயும் எப்போதும் எல்லோரையும் எப்போதும் கவரும் வகையில் சிறப்பான நடிப்பைப் பொடுத்திருக்கிறார் ஜெய்.
 திருமணம் எனும் நிக்காஹ் படத்தின் வெற்றிக்கு இசை அமைப்பாளர் கிப்ரானின் இசை பெரிய அளவில் உதவும். தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசந்திரன் சாருக்கு என் மீது நம்பிக்கை வைத்து படம் தந்தமைக்கு இந்த நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். திருமணம் எனும் நிக்காஹ் குடும்பத்தோடு பார்த்து மகிழும், ஒரு மெல்லிய காதல் இழை ஓடும், மெய்மறக்க செய்யும் இசை கலந்த படம் என்கிறார்

No comments :

Post a Comment