ரஜினி, இளையராஜா அலட்சியம் செய்தனர், நான் அவர்களை உதாசீனம்செய்தேன்... டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் பளிச்!
விஜயகாந்த்துக்கு பிரேக், மோகனுக்கு சூப்பர் ஹிட் என்று அந்தக் காலத்தில் வெற்றிப் படங்களை இயக்கிய சில்வர்ஜூப்ளி டைரக்டர், ஆர். சுந்தர்ராஜன் பகிந்துகொண்ட எவர் கிரீன் ஃப்ளாஷ்பேக் சம்பவங்கள் சில...
"நான் இயக்கிய 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில் 'மணியோசை கேட்டு எழுந்து' அப்போது பிரபலமான பாடல். சில வருடம் கழித்து கோயம்புத்தூரில ஒரு காலேஜ் நிகழ்ச்சியில் கலந்துக் கிட்டேன். அங்கே பாட்டுப் போட்டி நடந்துச்சு. அதுக்கு கோர்ட்டுல இருக்குற உண்மையான நீதிபதியையே நடுவரா போட்டு இருந்தாங்க. பாட்டுப் போட்டி ஆரம்பமாச்சு. மேடையில் ஒரு பையன் 'மணியோசை கேட்டு...' பாடலை பிரமாதமாக பாடி எல்லோருடைய கைதட்டலையும் வாங்கினான். கச்சேரி முடிந்தது நல்லாவே பாடாத ரெண்டு பேருக்கு முதல்பரிசு. ரெண்டாவது பரிசு கொடுத்தாங்க. பிரமாதமா 'மணியோசை...' பாடின பையனுக்கு மூன்றாவது பரிசை கொடுத்தாங்க எனக்கு மனசு கஷ்டமாயிருச்சு. காலேஜ் நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது நீதிபதியை சந்திக்கிற மாதிரி சந்திச்சி 'ஏங்க பிரமாதமா பாடின பையனுக்கு மூன்றாம் பரிசு கொடுத்தீங்களே நியாயமா சார்..'னு கோபமா கேள்வி கேட்டேன். 'நீங்க சொல்றது சரிதான் சார் ஆனா அந்த மாணவன் பாடும்போது இடையில அப்பப்போ இருமிக்கிட்டே இருந்தான் அதான் முதல் ரெண்டு பரிசை தரலை' என்று கூலாக சொன்னார் நீதிபதி.
'பயணங்கள் முடிவதில்லை' க்ளைமாக்ஸ் காட்சியை முடிக்கணும் அதுக்கு ஒரு பாட்டு வேணும்னு இளையராஜாவிடன் போனேன். 'இப்போதைக்கு முடியாது இன்னும் ஒரு மாசம் கழிச்சு வாங்கனு சொல்லிட்டார். நான் வேணும்னு அடம்பிடிச்சேன். 'சரி வேணா ஒண்ணு செய்றேன். நான் நாடகத்துக்கு இசை அமைச்சப்போ கங்கை அமரன் எழுதின ஒரு பாட்டு இருக்கு அதைக் கேளுங்க பிடிசிருந்தா எடுத்துக்கோங்க, இல்லைன்னா ஒரு மாசம் கழிச்சுதான்' என்று கறாரா சொல்லிட்டு ஆர்மோனியப் பெட்டியில இசைக்க ஆரம்பிச்சார். இளையராஜாவை ஓடிப்போய் கட்டிபிடிச்சுக்கிட்டேன். 'பயணங்கள் முடிவதில்லை' க்ளைமாக்ஸ் காட்சியில் மோகன்பாட மனதை உலுக்கிய 'வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன்' என்கிற அந்தப்பாடல்தான் அது.
இளையராஜா தயாரிச்சு, ரஜினி நடிச்ச 'ராஜாதி ராஜா' படத்தை நான்தான் இயக்கினேன். அந்தப் படத்துல இடம்பெற்ற 'நெஞ்சத்தொட்டு சொல்லு என் ராசா...' படல் பிரமாதமான பாட்டு. எம்.ஜி.ஆர் நடிச்ச 'எங்கவீட்டு பிள்ளை' படத்துல சரோஜாதேவியும், ரத்னாவும் பாடும் 'மலருக்குத் தென்றல் பகையானால்...' பாடல் பிரமாதமா இருக்கும். அதுபோல 'நெஞ்சத்தொட்டு...' பாட்டை ராதாவும், நதியாவும் பாடுகிற மாதிரி எடுத்து இருந்தேன் அருமையான மெலடி பாடல். 'ராஜாதி ராஜா' படப்பிடிப்பு முடிந்து முதல்பிரின்ட் காப்பியை ரஜினியும், இளையராஜாவும் ஸ்கிரினில் பார்த்துவிட்டு வெளிவந்தனர். ரஜினி வீட்டுக்கு சென்று விட்டார். என்னை அழைத்த இளையராஜா, 'ரஜினிக்கு 'நெஞ்சத்தொட்டு சொல்லு..' பாட்டு பிடிக்கலே ரொம்ப ஸ்லோவா இருக்குனு சொன்னார் அதனால தூக்கிடுங்கனு சொன்னார் எனக்கு செமகோபம். 'ராஜாதி ராஜா' ரிலீஸாச்சு ரெண்டுநாள் கழிச்சு என்னை அழைத்த ராஜா 'ரஜினி இப்போ 'நெஞ்சத்தொட்டு..' பாட்டை படத்தோட சேர்க்கச் சொல்றார்' னு சொன்னார். நான் முடியாதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ரஜினியும், இளையராஜவும் நான் இயக்கிய பாடல் காட்சியை அலட்சியம் செய்தனர் அதனால் அவர்கள் கருத்தை நான் உதாசீனம் செய்தேன்"
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment