மாரியப்பனுக்கு 50,000 ரூபாய் பரிசு அறிவித்தார் கருணாஸ்....

No comments

ரியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவிற்கு எம்.எல்.ஏ கருணாஸ் ரூ.50,000 பரிசு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

ரியோவில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தமிழக வீரர் மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்றார். இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் தங்கப்பதக்கம் வென்ற சேலத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு ரூ.50,000 பரிசுத் தொகை வழங்குவதாக எம்.எல்.ஏ கருணாஸ் அறிவித்துள்ளார்.

No comments :

Post a Comment