ஐஸ்வர்யா ராய்க்கு விருது....

No comments

முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் மிக பிரபலாமன நடிகையான ஐஸ்வர்யா ராய்க்கு இந்த ஆண்டிற்கான பிரபலமான பெண்களுக்குக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாரான அமிதாபச்சனின் மருமகளும், நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியுமான நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அவுட்லுக் மேகசீன் நிறுவனம் பிரபல பெண்களுக்கான விருதை வழங்கியுள்ளது.

இது குறித்து ஐஸ்வர்யாராய் கூறியதாவது, அவுட்லுக் மேகசீன் 19 பிரபல பெண்கள் லிஸ்ட் வெளியிட்டதில் எனக்கு முதல் இடம் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு அவுட்லுக் மேகசீனுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், என்னுடைய மகள் ஆராதயா பச்சனைத்தான் நான் எனது வாழ்நாள் சாதனையாக கருதுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.


No comments :

Post a Comment